நடுக்கடலில் விழுந்த மகள் – அடுத்த நொடியே கப்பலில் இருந்து குதித்த தந்தை

தற்செயலாக கடலில் விழுந்த தனது ஐந்து வயது மகளை காப்பாற்ற டிஸ்னி பயணக் கப்பலின் நான்காவது தளத்திலிருந்து குதிக்க ஒரு நொடியில் முடிவு செய்த ஒரு தந்தை ஹீரோவாகப் பாராட்டப்படுகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பஹாமாஸிலிருந்து தெற்கு புளோரிடாவுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த டிஸ்னி டிரீமில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பயணிகளின் கூற்றுப்படி, சிறுமி கப்பலின் ஒரு குறிப்பிடத்தக்க உயரத்திலிருந்து விழுந்துள்ளது, எனினும், சிறுமியின் தந்தை உடனடியாக தயக்கமின்றி கடலில் குதித்துள்ளார்.
கப்பல் மிக வேகமாக பயணித்த நிலையில், கடலில் விழுந்த சிறுமியும், காப்பாற்ற முனைந்த தந்தையும் தணித்து விடப்பட்டனர். இந்த பயங்கரமான தருணத்தை நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர்.
தனது மகள் கப்பலில் இருந்து கீழே விழுந்ததை உணர்ந்த தருணத்தில் தந்தையும் கடலில் குதித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கப்பலில் ஏற்பட்ட பதற்றத்தை அறிந்த, தலைமை மாலுமி அவசரமாக மீட்பு படகு ஒன்றை அனுப்பினார். பயிற்சி பெற்ற மீட்புப் பணியாளர்கள் தந்தை மற்றும் குழந்தையை நோக்கி விரைந்ததுடன், உயிர்காக்கும் கருவிகளையும் வழங்கினர்.
இது மீட்பு பணி குறித்த காணொளியை பயணிகள் வெளியிட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் தந்தை மற்றும் மகளை அடைந்த உணர்ச்சிகரமான தருணத்தைப் படம்பிடித்துள்ளனர்.
தந்தை தனது மகள் தண்ணீரில் மிதக்கும்போது இறுக்கமாகப் பிடித்திருப்பதைக் கண்டார். தனது மகளை மீட்புப் பணியாளர்களிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு, தானே மீட்புப் படகில் ஏறினார்.
இதனையடுத்து இருவரும் பாதுகாப்பாகக் கப்பலிலுக்கு அழைத்து வரப்பட்டதைக் கண்டு கப்பலில் இருந்த பயணிகள் ஆரவாரம் செய்து ஆனந்த கண்ணீர் விட்டழுதனர்.
இந்த விரைவான மீட்பு பணிகளுக்கு டிஸ்னி குரூஸ் பாராட்டப்பட்டுள்ளது. டிஸ்னி குரூஸ் லைன் ஒரு அறிக்கையில் அதன் குழுவினரைப் பாராட்டியுள்ளது.
“எங்கள் குழு உறுப்பினர்களின் விதிவிலக்கான திறன்கள் மற்றும் விரைவான நடவடிக்கைகளுக்கு நாங்கள் பாராட்டுகிறோம். இந்த செயல் பயணிகள் கப்பலுக்கு பாதுகாப்பாக திரும்பியதை உறுதி செய்தது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.