ஷிராந்தி கைதாவதை தடுக்க மஹிந்த முயற்சியா?

ஷிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு மகாநாயக்க தேரர்களின் உதவியை மஹிந்த ராஜபக்ச கோரினார் என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முற்றாக நிராகரித்துள்ளது.
‘ இது முற்றிலும் போலியான தகவலாகும். ஆளுங்கட்சியால் திட்டமிட்ட அடிப்படையில் பரப்படும் வதந்தியாகும்.” – என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.