ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள்; CID விசாரணை

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள்; CID விசாரணை

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் இந்த விடயங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அறிக்கையிட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அப்பயணங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விசாரணை தொடர்பில் தற்போது வெளிநாட்டிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கடமையாற்றிய, இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This