மத்திய கிழக்கு நிலைமைகளால் பல்வேறு துறைகளிலும் அழுத்தங்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மத்திய கிழக்கு நிலைமைகளால் பல்வேறு துறைகளிலும் அழுத்தங்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மத்திய கிழக்கு நிலைமைகளால் பல்வேறு துறைகளில் நாட்டுக்கு அழுத்தங்கள் ஏற்படலாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேயிலை உட்பட ஏற்றுமதி நடவடிக்கைகளில் நெருக்கடிகள் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ள அவர், உலகில் எரிபொருள் விலை அதிகரிக்க கூடிய அபாய நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று (25) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,மத்திய கிழக்கின் நிலைமைகள் காரணமாக நாட்டின் பல்வேறு துறைகளிலும் அழுத்தங்கள் ஏற்படலாம்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இலங்கையர்கள் பெருமளவில் தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதால் அந்த துறைகளில் பல்வேறு அழுத்தங்களும் ஏற்பட்டுள்ளன. பொதுவாக நோக்கும்போது உலக அளவில் எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.

 

CATEGORIES
TAGS
Share This