பஸ் கட்டணத்தில் திருத்தம்

பஸ் கட்டணத்தில் திருத்தம்

பஸ் கட்டணங்களை 02 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தினால் இன்று (25) பஸ் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் பஸ் சங்கங்களுக்கும் இடையே இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

ஜூலை முதலாம் திகதி திட்டமிடப்பட்ட வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையே இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இருப்பினும், அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு பஸ் சங்கங்கள் எதிர்ப்பை வௌியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

CATEGORIES
TAGS
Share This