அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசுப் பேரூந்துகள் கொள்வனவு

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசுப் பேரூந்துகள் கொள்வனவு

இலங்கை போக்குவரத்து சபையின் பொதுவான பேரூந்துத் தொகுதியில் 52% சதவீதமானவையும், மற்றும் அதிசொகுசு பேரூந்துத் தொகுதியில் 94% சதவீதமானவை பொருளாதாரத் தேய்மான ஆயுட்காலத்தைக் கடந்துள்ளதுடன், இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துத் தொகுதிக்கு புதிய பேரூந்துகளை அறிமுகம் செய்ய வேண்டிய அவசர தேவை நிலவுவதாக வாரதாந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைப் பயணிகளின் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான பேரூந்துகள் இன்மையால் இலங்கை போக்குவரத்துச் சபையால் தற்போது தனியார் துறையினருக்குச் சொந்தமான 61 அதிசொகுசு பேரூந்துகள் இலாபப் பகிர்வு அடிப்படையில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதிவேக நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்கான 200 அதிசொகுசு பேரூந்துகளை தமது சொந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நிதி இயலுமை கொண்ட இலங்கை போக்குவரத்துச் சபை சாலைகள் மூலம் 29 அதிசொகுசுப் பேரூந்துகளை நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கும், இலங்கை போக்குவரத்துச் சபையின் நிதியைப் பயன்படுத்தி ஆரம்பத் தொகையொன்றைச் செலுத்தியும் எஞ்சிய தொகையை மாதாந்தத் தவணைக் கொடுப்பனவாக ஈட்டப்படுகின்ற இலாபத்தில் செலுத்துவதன் மூலம் ஏனைய பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Share This