இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்சிலும் சதம் – ரிஷப் பண்ட் படைத்த சாதனைகள்

இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்சிலும் சதம் – ரிஷப் பண்ட் படைத்த சாதனைகள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் இன்று இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து அணி வெற்றிபெற 350 தேவையாகவுள்ளது.

அதேபோல் இந்தியா அணி வெற்றிபெற இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். எவ்வாறாயினும், இந்தப் போட்டி வெற்றிதோல்வி இன்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் சதம் அடித்திருந்தார். இதன்மூலம் குறிப்பிடத்தக்க சில சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டி லீட்சில் நடந்து வருகின்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ஓட்டங்களை குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 465 ஓட்டங்களை குவித்தது.

இதனையடுத்து ஆறு ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 364 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ஓட்டங்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 371 என்ற வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி நாங்காவது நாள் முடிவில் 21 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 351 ஓட்டங்களை அடிக்க வேண்டும். இந்தியா வெற்றி பெற 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.இத்தகைய பரபரப்பான சூழலில் “இன்று கடைசி நாள் ஆட்டம்”நடைபெற உள்ளது

இந்த டெஸ்டில் இரு இன்னின்சிலும் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சில சாதனைகளை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 134 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 118 ஓட்டங்களையும் விளாசினார். இதன் மூலம் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த ஏழாவது இந்தியர் ஆவார்.

இதற்கு முன்பு விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (மூன்று முறை), ராகுல் டிராவிட் (இரண்டு முறை), விராட் கோலி, ரஹானே, ரோகித் சர்மா ஆகிய இந்தியர்கள் இத்தகைய சாதனையை படைத்துள்ளனர்.

ஆனால் இங்கிலாந்து மண்ணில் இரு இன்னிங்சிலும் சதம் கண்ட முதல் இந்தியர் பண்ட் ஆவார். விக்கெட் காப்பாளர் ஒருவர் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் காண்பது இது இரண்டாவது நிகழ்வாகும்.

இதற்கு முன்பு ஜிம்பாப்வே விக்கெட் காப்பாளர் என்டி பிளவர் 2001ஆம் ஆண்டில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இரு இன்னிங்சிலும் (142 மற்றும் 199 ) சதம் அடித்திருந்தார்.

லீட்ஸ் டெஸ்டில் ரிஷப் பண்ட் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் ஒன்பது சிக்சர்கள் விளாசியுள்ளார்.

இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்களான இங்கிலாந்தின் பிளின்டொப், பென் ஸ்டோக்ஸ் (தலா 9 சிக்சர்) ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )