போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்

பிரபல தென்னிந்திய நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தகராறு ஏற்பட்டது. இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரசாந்திடமிருந்து ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக உள்ள தகவலின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்திடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீகாந்த் உண்மையிலேயே பிரசாந்திடமிருந்து போதைப்பொருளை பெற்றாரா? எதற்காக ஸ்ரீகாந்த் பெயர் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நூங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பதை உறுதி செய்ய இரத்த மாதிரிகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இரத்த மாதிரிகளின் முடிவு வெளியான பின் இந்த விவகாரத்தில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )