
திருகோணமலையில் கோர விபத்து – வைத்தியர் ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மற்றொரு நபர் படுகாயமடைந்தார். எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் மற்றும் வைத்தியர் பயணித்த முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் பயணித்த 59 வயதுடைய வைத்தியர் உயிரிழந்தார்.
முச்சக்கர வண்டி ஓட்டுநர் படுகாயமடைந்து முதலில் மூதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இறந்த வைத்தியரின் உடல் தற்போது சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES இலங்கை
TAGS Trincomalee
