ருத்ராட்ச மாலை அணியப் போகிறீர்களா? இந்த தப்பை செய்ய வேண்டாம்!

ருத்ராட்ச மாலை அணியப் போகிறீர்களா? இந்த தப்பை செய்ய வேண்டாம்!

ருத்ராட்சம் என்பது சிவபெருமானுக்கு உரியது. இந்த ருத்ராட்சம் ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் எனும் மரத்தின் விதை ஆகும்.

உயிர்களின் நன்மைக்காக பல காலம் தவம் மேற்கொண்ட சிவபெருமான் கண்விழித்தபோது அவரது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்துளிகள் தான் ருத்ராட்சமாக மாறியது என புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

அவ்வாறு புனிதமானதாக கருதப்படும் ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம்? அவ்வாறு அணியும்போது என்னவெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என இப் பதிவில் பார்ப்போம்.

யாரெல்லாம் அணியலாம்?

ஆண், பெண், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் அணியலாம்.

கடைபிடிக்க வேண்டியவை…

1 முதல் 14 வரையில் எண்ணிக்கையிலான ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான நன்மைகள் உள்ளன.

சிவப்பு நூல், தங்கம், வெள்ளி ஆகியவற்றில் ருத்ராட்சத்தைக் கோர்த்து அணிய வேண்டும். ஆனால், கருப்பு கயிற்றில் அணியக் கூடாது.

முதல் முறையாக இதனை அணியும்போது திங்கட்கிழமை அல்லது பிரதோஷ நாட்களில் ஓம் நமசிவாய மந்திரத்தைக் கூறி அணிந்துகொள்ள வேண்டும்.

ருத்ராட்சம் ஏதேனும் சேதமானால் அதனை ஆறு, குளங்கள் போன்ற நீர் நிலைகளில் விட வேண்டும். ஆனால், அதனை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது.

குழந்தை பிறத்தல், இறப்பு நிகழ்ச்சி ஆகியவை இடம்பெற்றால் ருத்ராட்சத்தைக் கழற்றிவிட வேண்டும்.

மது அருந்தும்போதும், அசைவம் சாப்பிடும்போதும் இதனை அணிவதை தவிர்க்க வேண்டும்.

ருத்ராட்சத்தை வாயில் வைத்து கடிக்கக்கூடாது.

Share This