வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை  – இருவர் கைது

வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை – இருவர் கைது

வாடகைகக்கு வாகனங்களைப் பெற்று,  போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர்கள் இருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரத்தில் வேன் ஒன்றை வாடகைக்குப் பெற்று அதனை 1.04 மில்லியன் ரூபாவிற்கும் பொரளையில் வாடகைக்குப் பெற்ற காரை 09 மில்லியன் ரூபாவிற்கும் விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாணந்துறை பொலிஸ் பிரிவில் வாடகைக் கார் ஒன்றை பெற்று அதனை 5.8 மில்லியனுக்கு, மொரகஹஹேன மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் வாடகை அடிப்படையில் கார்களை பெற்று அதனை 5.0 மில்லியனுக்கும், 4.2 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This