சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் நீதி அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

Share This