மெராயா பழைய மாணவர் சங்க கிரிக்கெட் தொடர் : மிலேனியம் லெஜன்ட்ஸ் அணி சாம்பியன்

நுவரெலியா, மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் கிரிகெட் தொடரில், 2000 ஆம் ஆண்டு மாணவர்களை உள்ளடக்கிய மிலேனியம் லெஜன்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தனர்.
லிந்துலை டீஆர்ஐ விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்கள் வெகு பிரமாண்டமாக இடம்பெற்ற இந்த போட்டித் தொடரில் 24 அணிகள் பங்குபற்றியிருந்தன.
மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டித் தொடரில் தமது அதீத திறமையை வெளிப்படுத்திய 2000 ஆம் ஆண்டு மிலேனியம் லெஜன்ட்ஸ் மற்றும் 2016 ஆம் ஆண்டு மாணவர்களை உள்ளடக்கிய ஏஎப்எப் ஆர்மி அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தனர்.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2016 ஆம் ஆண்டு மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட 3 ஓவர்களில் 21 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2000 ஆம் ஆண்டு மாணவர்கள் 2 ஓவர்களில் 22 ஓட்டங்களை இலகுவாக பெற்று வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தனர்.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக 2000ஆம் ஆண்டின் ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டார். மேலும் இந்த தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக 2000 ஆம் ஆண்டின் ஆனந்த் தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக நாகராஜ் தெரிவானார்.
பாடசாலையின் அபிவிருத்தி நலன் திட்டங்களை நோக்கமாக கொண்டு, பழைய மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
போட்டியின் ஆரம்ப நாள் பாடசாலையிலிருந்து மைதானம் வரை பேரணியாக சென்று பாடசாலை கீதம் மற்றும் தேசிய கீததத்துடன் போட்டிகள் ஆரம்மாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டித் தொடரில் பங்குபற்றிய அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் பதக்கங்களும் வழங்க வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இதேநேரம் அண்மையில் வெளியாகிய. பொ.த உயர்தர பெறுபேறுகளின் பிரகாரம் மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவி மதுஷா கலைப்பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 48ஆம் இடத்தையும் பெற்று சாதனைப் படைத்திருந்தார்.
சாதனைப்படைத்த இந்த மாணவியை பாராட்டும் முகமாக 2005 ஆம் ஆண்டு மாணவர்களால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினருக்கு நன்றிகளை தெரிவிப்பதாக பழைய மாணவர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.
 
 
 
 
