மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

பலத்த மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பி வழியும் மட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் இருந்து வான்பாய ஆரம்பித்துள்ளது.

பலத்த மழை பெய்தால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் தானாகவே திறக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This