‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் பயமுறுத்துகிறது – நயன்தாரா
![‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் பயமுறுத்துகிறது – நயன்தாரா ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் பயமுறுத்துகிறது – நயன்தாரா](https://oruvan.com/wp-content/uploads/2024/12/Nayanthara-announces-the-launch-of-9skin-scaled.jpg)
நயன்தாரா அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் பல கலவையான விமர்சனங்கள் வந்தன.
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எதற்காக அவருக்கு வழங்கப்பட்டது என்று ஒரு தரப்பினரும் சரியான நபருக்குதான் பட்டம் கிடைத்துள்ளது என இன்னொரு தரப்பினரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நயன்தாரா, அவரது லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பில் கேள்வியெழுப்பியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தால் நான் பல பின்னடைவுகளை சந்தித்திருக்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக நான் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவரிடமும் டை்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று என்னை குறிப்பிட வேண்டாம் என கூறியிருக்கிறேன். அந்தப் பட்டத்தை பார்க்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது. ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பால் இப்படி அழைக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.