
வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேகநபரும் கைது
வவுனியாவில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்று ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, கதிரவேல்பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன் சந்தேகநபராக 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் கஞ்சா மீட்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
CATEGORIES இலங்கை
TAGS Vavuniya
