இலங்கைக்கு உர நன்கொடை வழங்கிய ரஷ்யா

இலங்கைக்கு உர நன்கொடை வழங்கிய ரஷ்யா

ரஷ்யாவால் இலங்கைக்கு உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யனால் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் உரம் கையளிக்கப்பட்டது.

ரஷ்யாவின் உரல்கெம் ​​குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்த உரமானது, இலங்கையின் விவசாயத் துறைக்கு ஆதரவளித்து உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This