சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனை

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடும் விதிக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பாக அரச சட்டத்தரணி நசிகேசன் முன்னிலையாகி இருந்தார்.

சம்பூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியில் இருந்து மே மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த சிறுமியை மூன்று முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதன்படி ஒருமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்துக்காக 10 வருடங்கள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் 30 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்டஈடாக ஒரு குற்றத்திற்காக தலா ஒரு இலட்சம் வீதம் மூன்று இலட்சம் ரூபாய் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

CATEGORIES
TAGS
Share This