பூனாகலையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டூழியம் – பொதுமக்கள் பதற்றம்

பூனாகலையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டூழியம் – பொதுமக்கள் பதற்றம்

பதுளை மாவட்டத்தின் பூனாகலை தோட்டத்தில் காட்டு யானைகளின் அட்டூழியம் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

காட்டு யானைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதுடன், இதற்காக அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று (30.05.2025) பூனாகலை மத்திய மகா வித்தியாலயம் கட்டிடம், கடைத்தொகுதி  மற்றும் பிரதேசத்தில் உள்ள இரண்டு கடைத்தொகுதிகள் மற்றும் தற்காலிகமாக நடத்தி வந்த தோட்ட வைத்தியசாலை  என்பன யானைகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் இன்றைய தினம் மாணவர்களின் கல்வி கற்கும் செயல்பாடும் பாதிப்படைந்துள்ளது.

யானைகளின் அட்டூழியத்தை  கட்டுப்படுத்துமாறும், யானைகளை யால சரணாலயத்திற்கும் மாற்றுமாறும் பொது மக்கள் உரிய அதிகாரிகளடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This