இலங்கை முழுவதும் மோசமான வானிலை – 1,700 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கை முழுவதும் மோசமான வானிலை – 1,700 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தமையால் நேற்றுமுதல் நாடு முழுவதும் சீரற்ற வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று மாலை (மே 29) முதல் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது.

கடுமையான வானிலை காரணமாக ஒன்பது மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மூன்று வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 365 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால பல முக்கிய பாதைகளில் வாகனப் போக்குவரத்திற்கு குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )