நியூஸிலாந்து துணை பிரதமர் இன்று இலங்கை வருகிறார்

நியூஸிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், இன்று 24ஆம் திகதி இலங்கை வர உள்ளார்.
அவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட உள்ளார்.
வின்ஸ்டன் பீட்டர்ஸ், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உட்பட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளார்.
வர்த்தகம், முதலீடு, விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகியவற்றில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே அவருடைய பயணத்தின் நோக்கமாகும்.