கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் நீர் வெட்டு

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை(25) காலை 8மணி முதல் மாலை 8மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, பத்தரமுல்ல, கடுவெல, முல்லேரியாவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, IDH, மஹரகம, மொறட்டுவ, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் குறித்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு நகரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறும் இதன்போது கோரப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This