கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மு.பொன்னம்பலம் நினைவுப்பகிர்வு
கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மூத்த எழுத்தாளர், கவிஞர்
அமரர் மு. பொன்னம்பலம் (மு.பொ) நினைவுப்பகிர்வு இடம்பெறவுள்ளது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நினைவுப்பகிர்வில் முனைவர் செல்வி திருச்சந்திரன், பேராசிரியர் சி.மௌனகுரு ,பேராசிரியர் வ. மகேஸ்வரன், உரை பெயர்ப்பாளர் எஸ். சிவகுருநாதன் ,சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ,மெய்யியல் ஆசான் தா. இராஜரட்னம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்