அதிக விலை…. அக்வா, பிரியஸ் விற்பனையாகவில்லை! இறக்குமதி நிறுத்தம்

எதிர்பார்த்த வாகன தேவை இல்லாததால், நாட்டிற்குள் பல கார் மாடல்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவற்றில், டொயோட்டா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அக்வா மற்றும் ப்ரியஸ் ஆகியவை முக்கிய மாடல்களாகும் என இறக்குமதியாளர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வரி விகிதத்தின் கீழ் குறித்த கார்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், வாகன இறக்குமதியாளர்கள் தற்போது அந்த வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.
அதிக வரி விகிதங்கள் காரணமாக நடுத்தர வர்க்கத்தினரிடையே வாகனங்களுக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், வாகன விலைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத ஒரு பணக்கார சமூகக் குழு வழக்கம் போல் வாகனங்களை வாங்குவதால், சொகுசு கார்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
இறக்குமதியாளர்கள் அதிக விற்பனை கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதில் நாட்டம் காட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் பயன்படுத்தும் வாகனங்களை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.