சிவனொளிபாதமலைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை அப்பகுதிக்கு எடுத்துச்செல்ல வேண்டாம் என மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு
சுற்றுச்சூழல் அதிகார சபை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்கு வருகை தரும் போது, தங்களால் அதிகமான குப்பைகள் சேரும் சந்தரப்பத்தில் அதை தங்களுடனேயே எடுத்துச் செல்லுமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் முக்கிய நுழைவாயில்களில் (அதாவது நல்லத்தண்ணி பாதை மற்றும் இரத்தினபுரி வழியாக வரும் இரண்டு பாதைகளில்) உள்ளூராட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிவனொலிபாதமலை யாத்திரை காலத்தில் நடத்தும் குப்பை சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்குமாறு அனைத்து பக்தர்களிடமும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை யாத்திரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.