உலக வங்கியின் தலைவர் நாளை நாட்டிற்கு வருகை

உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா நாளைய தினம் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க உலக வங்கி தலைவர் அஜே பங்கா இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.
20 வருடங்களின் பின்னர் உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.
அவர் ஜனாதிபதி ,பிரதமர், மற்றும் பிற உயர் அதிகாரிகளைச் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துதல், தனியார் முதலீட்டை ஈர்த்தல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.