கல்கிஸை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் களுத்துறைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த வேட்பாளர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Share This