சீன ஜனாதிபதி ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம்

சீன ஜனாதிபதி ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம்

சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சீன ஜனாதிபதி எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ரஷ்யாவிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை வளர்ப்பதற்காக சீன ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்
புடினுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றதன் 80 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் மாஸ்கோவில்
நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது சீன-ரஷ்ய உறவுகளின் வளர்ச்சி மற்றும் முக்கியமான சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள்
குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் மூலோபாய விவாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This