மீண்டும் சிங்கப்பூர் பிரதமராகும் லாரன்ஸ் வாங்

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெறும் 14 ஆவது பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியே மீண்டும் வெற்றும் வாய்ப்பு காணப்படுவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன்
நேற்று சனிக்கிழமை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், சிங்கப்பூர் பொதுத்தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி(People’s Action Party) கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இதன்மூலம் அக்கட்சியின் லாரன்ஸ் வாங் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
அத்துடன் மக்கள் செயல் கட்சியின் வாக்கு வீதம் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் 61.2% ஆக இருந்த நிலையில், தற்போது 65.6% ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, சிங்கப்பூரின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, 10 இடங்களை தக்க வைத்துக் கொண்டது.
இந்த நிலையில், சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-சிங்கப்பூர் இடையே வலுவான உறவு உள்ளது என்றும் சிங்கப்பூருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.