நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் மறைவு முழு நாட்டுக்கும் இழப்பு – அமைச்சர் சந்திரசேகர் இரங்கல்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் மறைவு முழு நாட்டுக்கும் இழப்பு – அமைச்சர் சந்திரசேகர் இரங்கல்

இன நல்லிணக்கத்துக்காக நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆற்றிய ஆன்மீக சேவை அளப்பரியது. அவரின் மறைவு முழு நாட்டுக்கும் இழப்பாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

‘நல்லை ஆதீன குரு முதல்வர் இறையடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தி வேதனையளிக்கின்றது.

ஆன்மீக பணியென்பது புனிதமானது. அப்பணியை மிகவும் சிறப்பாக முன்னெடுத்தவர்தான்  நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். ஆன்மீக சேவைக்கு அவர் ஒருபோதும் மாசு ஏற்படுத்தவில்லை. அதன் புனிதத்தன்மையை கடைசிவரை காத்தார்.

நெருக்கடியான நேரங்களில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஆசி வேண்டி  பூஜைகளை நடத்தியுள்ளார். நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலும் மக்களுக்காக பல சேவைகளை புரிந்துள்ளார். இப்படியான மகான்களின் மறைவு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

பூரணமடைந்த சுவாமிகளின் ஆத்மா இறையடி சேர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.” – என்றுள்ளது.

Share This