அல் நாசரை வீழ்த்தியது கவாசாகி – ரொனால்டோ ரசிகர்களுக்கு ஏமாற்றம்

ஆசியன் சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிப் போட்டியில் அல் நாசர், ஜப்பானிய கழகமான கவாசாகி ஃபிரான்டேலிடம் தோல்வியடைந்தது.
நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி தோல்வியடைந்தது. இதன் மூலம், அல் நாசரின் சம்பியன்ஸ் லீக் இறுதிக் கனவுகள் தகர்ந்து போயின.
போட்டியின் 10வது நிமிடத்தில் கவாசாகி அணிக்காக தட்சுயா இடோ முதல் கோலை அடித்தார். ஆனால் 28வது நிமிடத்தில், சாடியோ மானே பதிலடி கொடுத்து கோலை சமன் செய்தார்.
தொடர்ந்து போட்டியின் 41வது நிமிடத்தில் அல் நாசருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் யூட்டோ ஓசெக்கி ஒரு கோல் அடித்து கவாசாகி அணியை முன்னிலைப்படுத்தினார்.
மேலும், 76வது நிமிடத்தில், அகிரோ லெனாகாவும் ஒரு கோல் அடிக்க கவாசாகி அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
போட்டியின் இறுதி நேரத்தில் அல் நாசர் அணி சார்பில் 87வது நிமிடத்தில் ஐமான் யஹ்யா கோல் அடிக்க 3-2 என்ற கோல் கணக்கில் அணி தோல்வியை தழுவிக்கொண்டது.
ஒரு முக்கியமான தருணத்தில் ரொனால்டோவால் கூட கோல் அடிக்க முடியாமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவாசாகி துல்லியமான தற்காப்பைப் போட்டு அல் நாசருக்கு எதிராக ஒரு உத்தியை வகுத்து வெற்றியை தனதாக்கிக் கொண்டது. அல் நாசரால் கவாசாகியின் வலிமையான தற்காப்பை உடைத்து ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.