சாஹலுக்கு தோனி வழங்கிய பரிசு – கிண்டலடித்த மேக்ஸ்வெல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தனது மட்டையை பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், தோனியின் மட்டையைப் பரிசாகப் பெற்ற சாஹல், மகிழ்ச்சியுடன் டிரஸ்ஸிங் அறைக்கு திரும்பினார்.
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சாஹலை, அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல், டிரஸ்ஸிங் ரூமில் ட்ரோல் செய்தார்.
பஞ்சாப் கிங்ஸின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொளி, தற்போது கிரிக்கெட் உலகில் டிரெண்டிங்கில் உள்ளது.
மேக்ஸ்வெல் ஏன் இந்த பேட் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, சாஹல் “அடிக்க” என்று பதிலளித்தார்.
மேலும் மேக்ஸி நகைச்சுவையாக, “இந்த சீசனில் நீங்கள் இன்னும் துடுப்பெடுத்தாடவில்லை, எனவே அணி இன்னும் உங்களை ஒரு இம்பெக்ட் வீரராக விளையாட வைக்கிறது” என்று கூறுகிறார்.
அருகில் இருந்த இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவும் சாஹலை கேலி செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். ஹரியானாவைச் சேர்ந்த ஒரு வீரர் நிச்சயமாக அந்த மட்டையை வெல்வார் என்று பிரியான்ஷ் கூறினார்.
பிரியான்ஷ் ஹரியானாவை சேர்ந்த வீரர் ஆவார்.
இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருந்த சாஹல், இன்னும் துடுப்பெடுத்தாடவில்லை. இந்த சீசனில் ஒன்பது போட்டிகளில் பந்து வீசியுள்ள சாஹல், ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.