தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் (29) முடிவடைகிறது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமானது.
முதல்கட்ட வாக்களிப்பு 24, 25ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இரண்டாம்கட்ட வாக்களிப்பு நேற்று 28ஆம் திகதியும் இன்று 29ஆம் திகதியும் இடம்பெறுகிறது.
தபால் மூல வாக்களிப்புக்கான கால எல்லை நீடிக்கப்படாதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.