புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
பதுளை புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (10) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை புகையிரத நிலையம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு சுமார் 75 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை மூன்று மணியளவில் ஒருவர் படுத்திருப்பதை ரயில்வே பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் அவதானித்துள்ளனர் அவரை எழுப்பிய போது அவர் எழும்ப வில்லை எனவும் பின்னர் அவர் இறந்து விட்டார் என தெரியவந்ததாக ரயிலில் நிலைய அதிகாரி தெரிவித்தார்
உயிரிழந்த நபர் யார் என அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ராமு தனராஜா)