போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – 331 பேர் கைது

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது கடந்த 24 மணி நேரத்தில் 331 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
கைது செய்யப்பட்டவர்களில் , 127 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும், 98 பேர் ஹெராயினுடனும், 104 பேர் கஞ்சா போதைப்பொருளுடனும், கைது செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த 13 ஆம் திகதி முதல் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கை பதில் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலுக்கமைய மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.