திருத்தந்தை பிரான்சிஸுக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இறுதி அஞ்சலி

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை புனித திருத்தந்தை பிரான்சிஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காக மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் பயணமானார்.
திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு புனித பீட்டர்ஸ் பேராலயத்திற்கு முன்னால் உள்ள சதுக்கத்தில் நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.
88 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த திங்கட்கிழமை (21) பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.