பஹல்காம் தாக்குதல் – இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் நீர் போரின் தொடக்கமா?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முக்கிய இராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா அறிவித்துள்ளது.
அவற்றில் மிக முக்கியமானது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ‘நிறுத்தி வைத்தல்’ ஆகம், பல நிபுணர்கள் இதை அண்டை நாடுகளுக்கு இடையிலான முதல் நீர் போரின் ஆரம்பம் என்று அழைக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு குறித்த உயர்மட்ட கூட்டத்தை நேற்று நடத்திய பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இந்தியாவின் எதிர்முனை தாக்குதலின் அதிரடியை குறிக்கிறது.
பாகிஸ்தான் “நம்பகத்தன்மையுடனும் மீளமுடியாத வகையிலும்” எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் நதி மேலாண்மையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், இது வரும் ஆண்டுகளில் ஒரு பெரிய நீர் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம், சிந்து நதி அமைப்பு ஆணையம் (IRSA), பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களுக்கு நடப்பு பயிர் பருவத்தின் கடைசி கட்டத்தில் 35 சதவீத நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று எச்சரித்தது.
மேலும், பாகிஸ்தான் நீடித்த வறட்சியை அனுபவித்து வருவதுடன், அங்கு மழைப்பொழிவு சராசரியை விடக் குறைவாக உள்ளது.
இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவு பாகிஸ்தானின் நிலைமையை மோசமாக்கக்கூடும், ஏனெனில் தற்போது, இந்தியத் தரப்பிலிருந்து அவர்களுக்கு எந்த தகவலும் தரவும் வழங்கப்படாது, இது மோசமான நதி மேலாண்மைக்கு வழிவகுக்கும்.
பாகிஸ்தான் உலகின் வறண்ட நாடுகளில் ஒன்றாகும், பாகிஸ்தானின் மொத்த விவசாய உற்பத்தியில் சுமார் 90 சதவீதம் சிந்து நதி நீர்ப்பாசன முறையால் ஆதரிக்கப்படும் விளைநிலங்களில் நிகழ்கிறது.
இந்திய நதிகளில் இருந்து விவசாயம் மற்றும் நீர் மின்சாரம் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24 சதவீதத்தையும், அதன் வேலைவாய்ப்பில் 45 சதவீதத்தையும், அதன் ஏற்றுமதியில் 60 சதவீதத்திற்கும் அதிகமானதையும் இயக்குகிறது.
உலக வங்கியின் தலையீட்டின் பேரில் 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நீடித்த ஒத்துழைப்பின் அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கு நதிகளான ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகியவற்றின் மீது இந்தியாவிற்கு பிரத்தியேக கட்டுப்பாடு வழங்கப்பட்டது.
அதே நேரத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள இந்தியப் பிரதேசத்தில் உருவெடுத்தாலும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் மீது பாகிஸ்தானுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.
இந்த ஒப்பந்தம் இத்தனை ஆண்டுகள் போர்கள் மற்றும் இராஜதந்திர முறிவுகளுக்கு மத்தியிலும் நீடித்தது. ஆனால் சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர், மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்துள்ளதாக தெரிகிறது.
எவ்வாறாயினும், இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிராக பாகிஸ்தான் சர்வதேச அமைப்புகளின் கதவுகளைத் தட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,