சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட லொறியொன்று கண்டுபிடிப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை இந்நாட்டிற்கு வரவழைத்து இணைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இசுசு ரக வகையிலான லொறியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹப்புத்தளை முதுவானவத்த பிரதேசத்தில் வைத்து வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் மூலம் குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் எந்தவித அனுமதியுமின்றி இந்த வாகனம் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.
தற்போது இந்த வாகனம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.