முல்லைத்தீவில் வங்கியில் திருட்டு – இளைஞன் கைது

முல்லைத்தீவில் வங்கியில் திருட்டு – இளைஞன் கைது

திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

முல்லைத்தீவு கூட்டுறவு கிராமிய வங்கி (CRB) கடந்த 17ஆம் திகதி கூரைபகுதி உடைக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்றும் (I phone), 52,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வங்கி நிர்வகத்தினரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனையடுத்து குறித்த கிராமிய கூட்டுறவு சங்கத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவியின் உதவியுடன், திருடப்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரின் முகநூலில் போடப்பட்ட தொலைபேசி பதிவினையும் அடிதளமாக கொண்டு நேற்றையதினம் (20.04.2025) சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொக்குளாய் பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This