டெங்கு காய்ச்சல் காரணமாக ஐவர் உயிரிழப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 14,678 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 49,870 ஆகும்.
இதனிடையே பாடசாலைகளில் டெங்கு கட்டுப்பாட்டு திட்டங்கள் இந்த வார இறுதியில் பிராந்திய மட்டத்தில் ஆரம்பமாகும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.