வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது
வலம்புரி சங்குகளை நான்கை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது
மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 41 வயது மற்றும் 42 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.