கோசல நுவானின் வெற்றிடத்துக்கு சமந்த ரணசிங்க நியமனம்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் திடீர் மறைவு காரணமாக ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு அவருக்கு அடுத்த விருப்ப வாக்கை பெற்ற சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.