அமெரிக்க வரி காரணமாக போனஸ் வழங்க முடியாது – அதிகாரியை வீட்டுக் காவலில் வைத்த ஊழியர்கள்

அமெரிக்க வரி காரணமாக போனஸ் வழங்க முடியாது – அதிகாரியை வீட்டுக் காவலில் வைத்த ஊழியர்கள்

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையில் நேற்று இரவு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போனஸ் வழங்க முடியாது என்று நிறுவனத் தலைவர்கள் தெரிவித்ததால் இந்த பதற்றமாக நிலைமை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைத் தொழிலாளர்கள் நிறுவனத்தின் அதிகாரியை வீட்டுக் காவலில் வைத்து போராட்டம் நடத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள புதிய வரிகள் காரணமாக புத்தாண்டு போனஸை வழங்க முடியாது என்று நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், ஊழியர்கள் இன்று காலை வரை நிறுவன நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி 44 வீத வரியை அறிவித்துள்ளார். இதனால் இலங்கையில் ஆடை தொழிற்துறை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This