ஜோகூர் கடற்கரையில் சிங்கப்பூர், இந்தியாவை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

ஜோகூர் கடற்கரையில் சிங்கப்பூர், இந்தியாவை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

மலேசியாவின் ஜோகூர் மாநிலம், மெர்சிங்கில் உள்ள மவார் தீவின் கடற்கரைக்கு அருகே சிங்கப்பூரர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 7) பிற்பகல் கடற்கரை நீரில் குளிப்பதற்காக இவர்கள் சென்றிருந்த போது திடீரெக ஏற்பட்ட பலத்த அலையில் இவர்கள் அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றர்.

எண்டாவ் தீயணைப்பு, மீட்பு நிலையம் இவர்களை மீட்டதாக கூறியுள்ளது. சிங்கப்பூரர் யோகராஜ் வீரன் (37) , இந்திய நாட்டவர் நாராயணன் ரவி (45), மலேசியர் கே.அன்பானந்தன் ஆகியோரே இவ்வாறு அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

மாலை 4.50 மணியளவிலிருந்து நாராயணன், மவார் தீவிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

கடற்கரை அருகே சுயநினைவின்றி நீரில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யோகராஜ், பொதுமக்கள் சிலரால் கரைக்குக் கொண்டுவரப்பட்டார். என்றாலும் அவர் உயிர் பிழைக்கவில்லை. அன்பானந்தனின் உயிர் மாத்திரம் காப்பாற்றப்பட்டது.

இறந்த இருவரின் உடல்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எண்டாவ் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் முகம்மது அலியாஸ் ஹுசேனை மேற்கோள்காட்டி பெர்னாமா ஊடகம் செய்தி வெளியிட்டது.

CATEGORIES
TAGS
Share This