கோழி இறைச்சி, முட்டை விலைகள் திடீர் அதிகரிப்பு

கோழி இறைச்சி, முட்டை விலைகள் திடீர் அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பண்டிகைக் காலத்தில் அதிக கேள்வி எழுவதே  விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

முட்டை ஒன்றின் சில்லறை விலை 39 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், கோழி இறைச்சி ஒரு கிலோ 1,200 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் சூழ்நிலையே இருப்பதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This