தருமபுரம் – நல்லை ஆதீனங்கள் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் இன்றைய தினம் புதன்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்தார்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக தருமபுரம் ஆதீனம் வருகைத்தந்துள்ளார்.
ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.