புதிய வரிக் கொள்கை மறுசீரமைப்பு – அமெரிக்காவிடம் வலியுறுத்திய இலங்கை

புதிய வரிக் கொள்கை மறுசீரமைப்பு – அமெரிக்காவிடம் வலியுறுத்திய இலங்கை

இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்குடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள புதிய புதிய வர்த்தக வரிகள் குறித்து இந்தச் சந்திப்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து தமது ‘X’ (எக்ஸ்) தளத்தில் பதிவிட்ட அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இந்த கலந்துரையாடலில் அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக உறவை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தியதாகவும், அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு பரஸ்பர நிவாரணத்தின் முக்கியத்துவத்தை இலங்கை வெளியுறவு அமைச்சர் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

நியாயமான, சமநிலையான வர்த்தக உறவு பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது மற்றும் நமது இரு நாடுகளிலும் தொழில்களை பலப்படுத்துகிறது என்றும் அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அண்மையில் தமது புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் பிரகாரம் இலங்கைக்கு 44 வீத வரியை விதித்துள்ளது.  இதனை மறுசீரமைப்பதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This