ரயிலில் சாகசம் காட்டிய வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை
கடலோர புகையிரதத்தின் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டிக்கு இடைப்பட்ட பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் ரயிலில் விழுந்து விபத்துக்குள்ளானார்.
சீனப் பெண்ணொருவர் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ரயிலின் கதவு ஓரத்தில் தொங்கியப்படி பயணித்த பெண்ணே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
எனினும் இந்த விபத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், குறித்த பெண் விபத்துக்குள்ளானதை அவளது தோழியின் அலைபேசி பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.