விஜய் பட சாதனையை முறியடித்தது அஜித்தின் குட் பேட் அக்லி

பிரபல நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரம் இந்தப்படம் திரைக்கு வரவுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்திருக்க ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கமர்ஷியல் படமாக அதே சமயத்தில் வித்யாசமான ஒரு படமாக தயாராகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
ஏற்கனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு இருக்க ட்ரைலர் வெளியீட்டிற்கு பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியாக இருக்கின்றது.
குட் பேட் அக்லி ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தை கடந்துவிட்டது. இந்த 24 மணி நேரத்தில் குட் பேட் அக்லி ட்ரைலர் 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற ட்ரைலர் என்ற சாதனையையும் பெருமையையும் பெற்றுள்ளது அஜித்தின் குட் பேட் அக்லி.
இதற்கு முன்பு விஜய்யின் லியோ திரைப்படம் தான் இந்த சாதனையை வைத்திருந்தது. லியோ ட்ரைலர் 24 மணி நேரத்தில் 31 .4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.
அந்த சாதனையை தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் முறியடித்துள்ளது. விஜய் பட சாதனையை அஜித்தின் படம் முறியடித்துள்ளதால் அஜித் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.