இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கு வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கு வருகை

மூன்று நாள் அரச பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று நேரத்திற்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றடைந்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இருவரும்  புனித ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ

இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் புதிய ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ரயில் பாதையையும் திறந்து வைக்கவுள்ளனர்.

இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் வருகையை முன்னிட்டு இன்று அனுராதபுரத்தில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This